“இது என்ன உங்க தாத்தா வீட்டு சொத்தா..?” ரயிலுக்குள் முதலிரவு அலங்காரம் செய்த விவகாரத்தில் டிடிஇ சஸ்பெண்ட்.. ரயில்வே எடுத்த அதிரடி நடவடிக்கை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது என்ன உங்க தாத்தா வீட்டு சொத்தா..?” ரயிலுக்குள் முதலிரவு அலங்காரம் செய்த விவகாரத்தில் டிடிஇ சஸ்பெண்ட்.. ரயில்வே எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Published

on

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில், புதுமண தம்பதிக்காக `ஹனிமூன்’ அலங்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதில் தொடர்புடைய பயணச்சீட்டு பரிசோதகர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் ஜால்னா ரயில் நிலையத்தில், முறையான அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைந்து இந்த அலங்காரப் பணிகளைச் செய்த கலைஞர் மீதும் ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே விதிமுறைகளை மீறி பொதுப் போக்குவரத்தில் இத்தகைய தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்தது குறித்து ரயில்வே துறை அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் தற்போது விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in