LATEST NEWS
“தூக்குங்கடா அவனை” எவ்வளவு தைரியம்..? ரயில்வேயின் அரசு படுக்கை விரிப்புகளை விற்ற வாலிபர்… கேமராவில் அம்பலப்படுத்திய நபர், தூக்கிய RPF போலீஸ்..!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர், இந்திய ரயில்வேயின் குளிர்சாதன (AC) பெட்டிகளில் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ வெள்ளை நிறப் படுக்கை விரிப்புகளை சாலையோரம் வைத்து மோட்டார் சைக்கிளில் விற்றுள்ளார். இந்தச் சம்பவத்தை சுனில் ஆர்யா என்ற நபர் தனது மொபைல் கேமராவில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, படுக்கை விரிப்புகளை விற்ற நபர்களையும் அவர்களது கிராமத்தில் இருந்த மற்ற கூட்டாளிகளையும் கைது செய்தனர். அவர்களின் இருப்பிடத்திலிருந்து பெருமளவிலான திருடப்பட்ட ரயில்வே படுக்கை விரிப்புகள் மற்றும் அரசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
https://www.instagram.com/reel/Dcc6PEkIIVR/?utm_source=ig_web_button_share_sheet
ரயில்வே விதிகளின்படி, பயணிகள் இத்தகைய படுக்கை விரிப்புகளைத் திருடினால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை பாயும். அதே நேரத்தில், ரயில் ஊழியர்கள் தங்கள் கண்காணிப்பில் உள்ள படுக்கை விரிப்புகளைத் தவறவிட்டால், ஒரு விரிப்பிற்கு சுமார் ₹250 வரை அவர்களின் சம்பளத்தில் இருந்து அபராதமாகப் பிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
