LATEST NEWS
இபிஎஸ்-ஐ துரத்திவிட்டு வேலுமணிக்கு பொதுச்செயலாளர் பதவி..? சிவி, சண்முகம், நத்தம் விஸ்வநாதனுக்கு பதவி… சசிகலாவின் ரகசிய ஸ்கெட்ச்… அதிரும் அதிமுக…!!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் தன் வசமாக்க சசிகலா தீவிரமான அரசியல் வியூகங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியை மீட்டெடுக்கும் நோக்கில், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த முக்கிய சீனியர் தலைவர்களைத் தன் பக்கம் இழுக்க சசிகலா தரப்பு திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய வியூகத்தின் ஒரு பகுதியாக, அதிமுகவின் பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணியையும், இணைப் பொதுச்செயலாளராக சி.வி. சண்முகத்தையும், கட்சியின் பொருளாளராக நத்தம் விஸ்வநாதனையும் நியமிக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கொங்கு மற்றும் வட தமிழகப் பகுதிகளில் வலுவான செல்வாக்கு கொண்ட இந்தத் தலைவர்களுக்குக் கட்சியில் உச்சகட்டப் பதவிகளை வழங்குவதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பிடியைத் தளர்த்த முடியும் என சசிகலா நம்புவதாகத் தெரிகிறது.
இதைப்பற்றி அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் திட்டத்திற்கு உடன்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் மற்றும் தற்போது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்குவது குறித்து இபிஎஸ் தனது மிக நெருக்கமான ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
