LATEST NEWS
” கடைசில அவரே ஓடிட்டார்..” முதலமைச்சர் விஜய்யை வறுத்தெடுத்த எடப்பாடியார்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினால், ‘நான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிவிடக் கூடாது’ என்று கூறிவிட்டு முதலமைச்சர் விஜய் அவரே ஓடிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது குறித்து தாங்கள் எழுப்பிய எந்தவொரு கேள்விகளுக்கும் முதலமைச்சரிடம் இருந்து முறையான பதில் வரவில்லை எனச் சாடினார். மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பிரச்சனைகளில் இருந்து முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதாகவும், கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் “முதலமைச்சர் விஜய் ஓடிவிட்டார்” என்று விமர்சித்து வந்த நிலையில், தற்பொழுது அதே கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முன்வைத்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலிருந்தும் முதலமைச்சர் விஜயை நோக்கி ஒரே மாதிரியான விமரிசனங்கள் முன்வைக்கப்படுவது தமிழக அரசியலில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
