LATEST NEWS
இந்தியாவில் லட்சங்களில் செலவு.. கனடாவில் வெறும் ரூ.1500-ல் பிரசவம்… இந்தியப் பெண் பகிர்ந்த வியப்பூட்டும் உண்மை..!!
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிரசவம் என்றாலே லட்சக்கணக்கில் பணம் செலவாகும் நிலை உள்ளது. ஆனால், கனடாவில் வசிக்கும் பிரேரணா ராணா என்ற இந்தியப் பெண், தனது பிரசவத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அங்குள்ள சுகாதாரக் கட்டமைப்பின் நன்மைகளையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கனடாவில் குழந்தை பெற்றெடுத்த அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் பிரசவத்திற்கு எந்தவிதக் கட்டணப் பட்டியலையும் வழங்கவில்லை என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வீடியோவில் தோன்றும் பிரேரணா, கர்ப்பகால பரிசோதனைகள், மருந்துகள் முதல் பிரசவம் வரை அனைத்து மருத்துவச் செலவுகளும் அரசின் சுகாதாரக் காப்பீட்டிலேயே அடங்கிவிட்டதால், தனக்கு ஒரு ரூபாய் கூட செலவாகவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், குழந்தையின் பிறப்பிற்குப் பிறகு வழங்கப்படும் மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் டைபர்கள் வரை அனைத்தும் மருத்துவமனையிலேயே இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அரசாங்க மருத்துவமனையாக இருந்தாலும், அங்குள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற சொகுசு அறை வசதிகளுடன் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DdIYjZNKHmp/?utm_source=ig_web_button_share_sheet
அப்படியானால், தலைப்பில் கூறப்பட்ட அந்த $17 டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,200 முதல் ரூ.1,500 எதற்காகச் செலவானது என்பதற்கு விளக்கமளித்த பிரேரணா, அந்தத் தொகை மருத்துவமனை பிரசவத்திற்காகச் செலவிடப்படவில்லை என்றும், மருத்துவமனையின் தனியாரால் நிர்வகிக்கப்பட்ட வாகன நிறுத்தத்திற்கு மட்டுமே கட்டணமாகச் செலுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார். கனடாவில் தாங்கள் செலுத்தும் வரிகளுக்கு உரிய முழு பலனும் பயனும் தங்களுக்குக் கிடைத்திருப்பதாக அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
