LATEST NEWS
#BREAKING: ரூ.11,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தார் முதலமைச்சர் விஜய்..!!
லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ₹11,000 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தில் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. லண்டனில் நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ நிகழ்வில், முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வழிகாட்டல் நிறுவனம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த லண்டன் பயணத்தின் மூலம் முதல்வர் விஜய் இந்த முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
