“12 லட்சத்திற்கு வாங்கிய நகை திடீரென செம்பா மாறிடுச்சி” கடையில் வாடிக்கையாளர்கள் ரகளை.. முதலாளி எஸ்கேப்.. பின்னணியில் பகீர் டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“12 லட்சத்திற்கு வாங்கிய நகை திடீரென செம்பா மாறிடுச்சி” கடையில் வாடிக்கையாளர்கள் ரகளை.. முதலாளி எஸ்கேப்.. பின்னணியில் பகீர் டுவிஸ்ட்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மா பகவதி ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையில் வாங்கப்பட்ட ₹12 லட்சம் மதிப்புள்ள நகைகள் அனைத்தும் தாமிரத்தால் (செம்பு) செய்யப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. இந்த நகைகளை வாங்கிய வாடிக்கையாளர்களான நயீம் மற்றும் ஜைனப் ஆகியோர், தங்களுக்குப் போலி நகைகள் வழங்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட நகைக் கடைக்குச் சென்று அங்கு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கண்ட நகைக் கடை உரிமையாளர் (தட்டான்), கடையில் இருந்து தப்பியோடி தலைமறைவானார்.

Advertisement

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் புகாரைப் பெற்றுக்கொண்டனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, தப்பியோடிய கடை உரிமையாளர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in