முத்தலாக் கூறி கணவனே செய்த கொடூரம்… 2 கொழுந்தனார்களுடன் கட்டாய உடலுறவு… வீட்டிற்குள் அடைத்து வைத்து மனைவிக்கு நேரந்த பயங்கரம். அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முத்தலாக் கூறி கணவனே செய்த கொடூரம்… 2 கொழுந்தனார்களுடன் கட்டாய உடலுறவு… வீட்டிற்குள் அடைத்து வைத்து மனைவிக்கு நேரந்த பயங்கரம். அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், முத்தலாக் மற்றும் ஹலாலா முறையின் பெயரில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பன்னாதேவி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணை, சிறிய தகராறு காரணமாக அவரது கணவர் திடீரென ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்துள்ளார்.

இதன்பின், மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டுமானால் ‘ஹலாலா’ நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறி, அந்தப் பெண்ணை அவரது கணவரே வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளார். பின்னர், மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, தனது இரண்டு சகோதரர்களுடன் (கொழுந்தனார்கள்) கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ள வைத்து, கடுமையான உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதை செய்துள்ளனர்.

Advertisement

நாட்கள் கணக்கில் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டிருந்த அந்தப் பெண், ஒருகட்டத்தில் யாருக்கும் தெரியாமல் தனது சகோதரருக்கு வாட்ஸ்அப் வழியாகத் தகவல் அனுப்பியுள்ளார். சகோதரர் உடனடியாகக் காவல்துறையை அணுகியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்தப் பெண்ணை அவர்களின் பிடியில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.

தற்போது, கர்ணி சேனா அமைப்பினருடன் சென்று அலிகார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்குக் காரணமான கணவர் மற்றும் இரண்டு கொழுந்தனார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in