இது என்ன கொடுமை.. “சுத்தமா இருக்குறது ஓகே.. ஆனா இது ரொம்ப ஓவரா இருக்கு…” “கழிவறையை கழுவியதும் யூஸ் பண்ணக் கூடாதாம்..! மனைவியின் அதீத சுத்தத்தால் அலறி அடித்து கோர்ட்டுக்கு ஓடிய கணவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இது என்ன கொடுமை.. “சுத்தமா இருக்குறது ஓகே.. ஆனா இது ரொம்ப ஓவரா இருக்கு…” “கழிவறையை கழுவியதும் யூஸ் பண்ணக் கூடாதாம்..! மனைவியின் அதீத சுத்தத்தால் அலறி அடித்து கோர்ட்டுக்கு ஓடிய கணவன்..!!

Published

on

கழிவறையை சுத்தம் செய்த உடனே அதை பயன்படுத்த மனைவி மறுப்பதாக கூறி துருக்கியை சேர்ந்த நபர் விவாகரத்து கோரியுள்ளார். 4 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடத்தி வந்த அந்த நபர் தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கழிவறையை சுத்தம் செய்த உடனேயே, அதனை பயன்படுத்த அனுமதிக்க மறுப்பதாகவும், படுக்கையில் தலைமுடி உதிர்ந்தால் கடும் கோபம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சமையல் செய்தால் சமையலறை அழுக்காகிவிடும் என்பதால் வீட்டில் சமைப்பதை தவிர்த்து வெளியே உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி எதிலும் சுத்தம் எதிர்பார்ப்பதாகவும், இரவு நேரத்தில் உடலுறவு கொள்வதிலும் அதீத சுத்தமாக இருக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். மனைவியின் தூய்மை மீதான கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்ததால், வீட்டில் வழக்கமான வேலைகளை செய்வதே சிரமமாகிவிட்டதாக கணவர் கூறியுள்ளார்.

Advertisement

இந்த பிரச்சினைகளால் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மனைவியே காரணம் எனக் கூறியுள்ள கணவர், விவாகரத்துடன் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.40 கோடி) இழப்பீடு கோரியுள்ளார். இந்த தொகை வீட்டுடன் தொடர்புடைய செலவுகள் மற்றும் திருமண வாழ்க்கையால் ஏற்பட்டதாக அவர் கூறும் மன உளைச்சலுக்கான இழப்பீடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மனைவியின் சுத்தம் மீதான அதீத கவனம், இறுதியில் விவாகரத்து வழக்கு வரை சென்ற சம்பவம் துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in