LATEST NEWS
“தம்பி என்னை அங்க விட்ருப்பா..” போதையில் வாலிபர் ஓட்டிய பைக்… ‘லிப்ட்’ கேட்டு ஏறிய முதியவருக்கு நேர்ந்த பரிதாப முடிவு… நெல்லையில் சோகம்..!!
போதை வாலிபரிடம் ‘லிப்ட்’ கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிய முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மாயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன் (வயது 25). இவர் நேற்று அம்பலம் டாஸ்மாக் மதுபான கடையில் மது அருவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ஏற்கனவே டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்த மூலைக்கரைப்பட்டி காலனி தெருவை சேர்ந்த முனியாண்டி (வயது 63) என்பவர் லிப்ட் கேட்டு முத்துகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளில் ஏறினார்.
இதையடுத்து போதையில் தள்ளாடிய முத்துகிருஷ்ணன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் முனியாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த முத்துகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
