LATEST NEWS
எனக்கு மது அருந்துற பழக்கம் இல்ல… அதனால அது என்ன பிராண்ட் என்னானு எனக்குத் தெரியாது… ஓபனாக பேசிய எடப்பாடி..!!
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்ரிகா நிறுவனத்தின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, ஒரே நாளில் அதிரடியாக நீக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட மதுபான தயாரிப்புகளில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு, அதன் பின்னரே தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலக்கப்பட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட மதுபானங்களின் மீதான தடை, மிகக் குறுகிய காலத்தில் விலக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு கேள்விகளும், அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களும் தற்பொழுது எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தத் தடை நீக்கம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “எனக்கு மது அருந்துற பழக்கம் இல்லை; அதனால அது என்ன பிராண்ட் என்னானு எனக்குத் தெரியாது” என்று தனது பாணியில் சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.
