“அய்யோ கடவுளே… சிரித்துக்கொண்டே ராட்டினத்தில் ஏறிய பெண்… அடுத்த சில நிமிடங்களில் நடந்த பகீர் சம்பவம்…” நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ கடவுளே… சிரித்துக்கொண்டே ராட்டினத்தில் ஏறிய பெண்… அடுத்த சில நிமிடங்களில் நடந்த பகீர் சம்பவம்…” நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள மஹாகாவ் தாலுகா, புல்சாவங்கி பகுதியில் கோயில் திருவிழாவின் போது ஒரு கொடூர விபத்து நடந்துள்ளது. புணேஸ்வர் கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற ‘தன்ஹா போலா’ திருவிழாவில் உள்ளூர்வாசியான பாலி மாருதி தாலிகோட்டே என்ற பெண் ராட்சத ராட்டினத்தில் சவாரி செய்துள்ளார். அப்போது ராட்டினம் இயங்கிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக அப்பெண்ணின் தலைமுடி ராட்டினத்தின் ‘பியரிங்’ பகுதியில் மாட்டிக்கொண்டது.

முடி பியரிங்கில் சிக்கிய பிறகும் ராட்டினம் தொடர்ந்து சுழன்றதால், முடி பலமாக இழுக்கப்பட்டு அப்பெண்ணின் மண்டை ஓட்டுத் தோலின் ஒரு பகுதி கொடூரமாக உரிந்து படுகாயம் ஏற்பட்டது. இந்த திடீர் விபத்தால் ராட்டினத்தில் இருந்தவர்களிடையேயும் திருவிழா கூட்டத்திலேயும் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது. உடனடியாக அப்பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

https://www.instagram.com/p/DdOVpm9kayB/?utm_source=ig_web_button_share_sheet

இச்சம்பவத்தைத் தொடர்ந்து திருவிழாக்களில் அமைக்கப்படும் ராட்டினங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ராட்டினத்தின் இயக்கம் மற்றும் அதன் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா, தொழில்நுட்ப சோதனைகள் நடத்தப்பட்டதா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ராட்டின இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது கவனக்குறைவா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in