“என்கிட்ட கார் இருக்கு” அதனால் அரசு கொடுக்கும் கார் எனக்கு வேண்டாம்… எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்ட அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்கிட்ட கார் இருக்கு” அதனால் அரசு கொடுக்கும் கார் எனக்கு வேண்டாம்… எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்ட அறிவிப்பு..!!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி , தன்னிடம் ஏற்கனவே சொந்தக் கார் இருப்பதால், இந்த அரசு கார் தனக்குத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தாம் தமிழக முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த காலகட்டங்களில் மட்டுமே அரசு வாகனங்களைப் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு வழங்கும் இந்தக் கார்கள் ஒன்றும் எம்.எல்.ஏ-க்களின் தனிப்பட்டச் சொந்த சொத்துக்கள் கிடையாது என்றும், அவர்கள் பதவியில் இருக்கும் காலம் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்பதால், பதவிக்காலம் முடிந்தவுடன் இவை அனைத்தும் அரசிடமே திருப்பித் தரப்பட வேண்டியவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், தங்களது கட்சித் தலைமை இந்த விவகாரத்தில் யாருக்கும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்றும், அரசு வழங்கும் இந்தக் கார் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்பது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in