“பதவியை பறிக்க முடியாது” ஆனால் MLA சான்றிதழை திரும்பப் பெறுங்கள்” அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பதவியை பறிக்க முடியாது” ஆனால் MLA சான்றிதழை திரும்பப் பெறுங்கள்” அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்..!

Published

on

கடந்த திமுமாக ஆட்சிக் காலத்தில் தனது கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாகத் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பகிரங்கமாகக் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் அமைச்சராகப் பதவியேற்றபோது எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு முரணாகவும், தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டுள்ளார் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெனீபர், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், லஞ்சம் கொடுத்ததை அவரே ஒப்புக்கொண்டதால், அவரின் சட்டமன்ற உறுப்பினர் சான்றிதழை தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த நோட்டீஸில், லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதால், லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மேரி வில்சன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், தற்போது நடைமுறையில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அமைச்சரின் பதவியைப் பறிக்கப் போதிய வழிவகை இல்லை என்பதையும், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தகுதிநீக்கம் சாத்தியம் என்பதையும் சட்ட விதிகளின் அடிப்படையில் அந்த நோட்டீஸில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in