“அன்று நடக்கக் கத்துக்கொடுத்தவர் இன்று..!” 80 வயது தந்தையின் ஆசைக்காக வாலிபர் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. நெட்டிசன்களை உருகவைத்த ஒரு மகனின் பாசம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்று நடக்கக் கத்துக்கொடுத்தவர் இன்று..!” 80 வயது தந்தையின் ஆசைக்காக வாலிபர் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. நெட்டிசன்களை உருகவைத்த ஒரு மகனின் பாசம்..!!

Published

on

புற்றுநோயால் தனது தாயை இழந்த பிறகு, தனது 80 வயது முதிய தந்தையின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு வாலிபர் தனது வேலையை துறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘புகாத் முசாஃபிர்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வரும் ஸ்ரீகாந்த் பாண்டே என்ற இளைஞர், தனது தந்தையை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். “நமக்கு நடக்கக் கற்றுக்கொடுத்த அப்பா, இப்போது முதன்முறையாக ஆகாயத்தில் பறக்கப்போகிறார்” என்று ஸ்ரீகாந்த் தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/Ddf8knRs8W2/?utm_source=ig_embed&ig_rid=AcuWPso2h6khL8L_YaOebRf

Advertisement

விமானத்திற்குள் நுழைந்ததும் அங்குள்ள பணிப்பெண்ணை கைகூப்பி முதியவர் வணங்கும் காட்சியும், ஸ்ரீகாந்த் தனது தந்தையை ஜன்னல் ஓர இருக்கையில் அமரவைத்து உலகைக் காட்டும் காட்சியும் நெட்டிசன்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. தாயின் மறைவுக்குப் பின் வாழ்க்கை மிகவும் சிறியது என்பதை உணர்ந்து, தமக்காக வாழ்ந்த பெற்றோரின் கனவுகளைத் தள்ளிப்போடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். பெற்றோரை விடச் சிறந்த தெய்வம் வேறில்லை என்றும், தந்தையின் கனவை நிறைவேற்ற ஸ்ரீகாந்துக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு மிகப்பெரிய பாக்கியம் என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in