LATEST NEWS
“அடுத்த வருஷம் வர்றேன்..!” ஆற்றில் மூழ்கும் போது விநாயகர் காட்டிய அந்த ஒரு சைகை.. நெட்டிசன்களை சிலிர்க்க வைத்த வீடியோ..!!
விநாயகர் சதுர்த்தி விழாவைத் தொடர்ந்து நடைபெறும் விநாயகர் சிலை விசர்ஜனத்தின் போது, ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட விநாயகர் சிலையின் கை திடீரென நீருக்கு வெளியே வந்து பக்தர்களுக்கு ‘டாடா’ காட்டுவது போன்ற ஒரு அதிசய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலை தண்ணீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும் போது, இறுதி நொடியில் அதன் ஒரு கை மட்டும் நீருக்கு மேல் எழும்பி, மீண்டும் நீருக்குள் செல்லும் காட்சி பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கிறது. அறிவியல் ரீதியாக இதற்கு நீரின் ஓட்டம், சிலையின் எடை போன்ற காரணங்கள் இருந்தாலும், பக்திப் பரவசத்தில் இருக்கும் நெட்டிசன்கள் இதை ஒரு தெய்வீக அற்புதமாகவே பார்க்கின்றனர்.
https://www.instagram.com/reel/DdheaO0oi3-/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த 13 வினாடி கிளிப், வெளியான சில மணி நேரங்களிலேயே 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 29 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று இணையத்தை உலுக்கி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “விநாயகர் விடைபெற மறந்துவிட்டதால், மீண்டும் வந்து பை-பை சொல்லிவிட்டுச் செல்கிறார்” என்றும், “அவர் தனது பக்தர்களுக்கு ஆசி வழங்கிவிட்டுச் செல்கிறார்” என்றும் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
