“ஒருத்தனையும் விடாதீங்க!” GEM வீரமணி வழக்கில் ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்.. அரண்டுபோன பெரும் புள்ளிகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒருத்தனையும் விடாதீங்க!” GEM வீரமணி வழக்கில் ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்.. அரண்டுபோன பெரும் புள்ளிகள்..!!

Published

on

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெம் குழுமத் தலைவர் வீரமணியின் சிறுமிகள் துஷ்பிரயோக வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பக் கூடாது என்று காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை நேரில் அழைத்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். 84 வயதான தொழிலதிபர் வீரமணி, அறக்கட்டளை மற்றும் படிக்க நிதியுதவி அளிப்பதாகக் கூறி ஏழைச் சிறுமிகளைத் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும், பல முக்கியப் பிரமுகர்களுக்கும் அவர் சிறுமிகளை அனுப்பியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தற்போது இந்த வழக்கில் வீரமணி, அவருக்குத் துணையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய மூவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொடூரச் செயலில் குறைந்தபட்சம் 9 சிறுமிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால், காவல்துறையினர் தங்களது விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in