LATEST NEWS
“ஜெம் வீரமணியைத் தப்பிக்க வைத்தது யார்..?” தி.மு.க ஏன் நடவடிக்கை எடுக்கல..? ஸ்டாலினுக்கு எதிராக சி.பி.எம் சண்முகம் அதிரடி கிடுக்குப்பிடி கேள்வி..!!
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கு கடந்த தி.மு.க ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டதா என்று த.வெ.க அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் சி.பி.எம் மூத்த தலைவர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தி.மு.க அரசுக்கு எதிராக அவர் அடுக்கடுக்கான கிடுக்குப்பிடி கேள்விகளை முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.பி.எம் சண்முகம், “மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஜெம் வீரமணி மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என்று மிக நேரடியான கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும், இந்த வழக்கில் இருந்து தொழிலதிபர் வீரமணியைத் தப்பிக்க வைத்தது யார் என்றும், அவர் மீது காவல்துறையினர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருக்கப் பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுத்தது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, கடந்த தி.மு.க ஆட்சியில் இந்த பாலியல் வழக்கு மூடி மறைக்கப்பட்டதை கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா இல்லையா என்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது சி.பி.எம் சண்முகம் இந்த விவகாரத்தில் தி.மு.க அரசுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை முன்வைத்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
