LATEST NEWS
அடப்பாவி..! ரேஷன் கடையை தீ வைத்து கொளுத்திவிட்டு நாடகமாடிய பெண் ஊழியர்… அடுத்து தெரியவந்த உண்மை… சேலத்தில் பரபரப்பு..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, கடை விற்பனையாளரே திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில், பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்ததால் 20-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்ததாக கடை விற்பனையாளர் ஹேமலதா தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவரே அரிசி மூட்டைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு விபத்து போல நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் கடை முறைகேடுகளை மறைக்க இந்த செயலில் அவர் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, விற்பனையாளர் ஹேமலதாவை போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
