LATEST NEWS
“நெஞ்சில் ஈரமே இல்லையா…?” கடைக்குள் புகுந்து ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு…. பட்டப்பகலில் அரங்கேறிய கொடூர வெறிச்செயல்…. அலறித் துடித்த கொடூர வீடியோ….!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கிராமப்புறத்தில் உள்ள கிஷன்கர் ரென்வால் பகுதியில், மதுக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த சேல்ஸ்மேன் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கரட் சாலையில் அமைந்துள்ள இந்த மதுக்கடையில் சேல்ஸ்மேன் பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை அவர் மீது வீசி திடீரென தீ வைத்துள்ளனர்.
இந்த எதிர்பாராத கொடூர தாக்குதலால் சேல்ஸ்மேன் உடல் கருகி நிலைகுலைந்தார். அத்துடன் கடையில் இருந்த மது பாட்டில்களுக்கும் தீ பரவியது. சுற்றியிருந்த கிராம மக்கள் உடனடியாக அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ரென்வால் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஏதேனும் முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் தகராறுகள் பின்னணியில் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
