“அக்கா, நாளைக்கு வருவீங்கதானே..?” 9 மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பொங்கி வழியும் ஆற்று வெள்ளத்தைக் கடக்கும் ஆசிரியர்… நெஞ்சை அடைக்க வைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அக்கா, நாளைக்கு வருவீங்கதானே..?” 9 மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பொங்கி வழியும் ஆற்று வெள்ளத்தைக் கடக்கும் ஆசிரியர்… நெஞ்சை அடைக்க வைக்கும் காட்சி..!!

Published

on

சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ‘கோராசர்’ என்ற சிறிய கிராமத்தில் 15 முதல் 20 வீடுகள் மட்டுமே உள்ளன. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 2005-ஆம் ஆண்டு முதல் 9 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்த கிராமத்திற்குச் செல்லும் வழி மிகவும் கடினமானது, குறிப்பாக மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சூழ்நிலையிலும், அங்குள்ள 9 குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியைகள் தினமும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பள்ளியில் பணியாற்றும் கர்மிலா டோப்போ மற்றும் சந்தியா ஹால்தார் ஆகிய இரு ஆசிரியைகளும் தினமும் 3 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் நடந்து செல்ல வேண்டும். அதன்பின்னர், மழைக்காலத்தில் கடும் வெள்ளப்பெருக்குடன் பொங்கி வழியும் ‘மோரன்’ மற்றும் ‘இரியா’ ஆகிய நதிகள் சங்கமிக்கும் பகுதியைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்ல முடிகிறது. இதில் ஆசிரியை கர்மிலா டோப்போ, தனது 9 மாத பெண் குழந்தையைத் துணியில் கட்டி மார்போடு அணைத்தபடி, ஒரு கையில் குடையும் தோளில் பையுமாக இந்த ஆபத்தான நதியைக் கடந்து பள்ளிக்குச் செல்கிறார். 2014 முதல் பணியாற்றி வரும் இவர், வெள்ளத்தைக் கடக்கும்போது பயமாக இருந்தாலும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத் துணிந்து செல்வதாகக் கூறுகிறார்.

Advertisement

மழை, வெள்ளம் மற்றும் கடினமான பாதையையும் பொருட்படுத்தாமல் தினமும் இந்த ஆசிரியைகள் வருவதற்குச் சிறுவர்களின் “அக்கா, நாளைக்கு கண்டிப்பா வருவீங்கதானே?” என்ற அன்பு நிறைந்த கேள்விதான் முக்கியக் காரணியாக உள்ளது. இவர்களின் இந்த தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் கடமையுணர்வையும் பல்ராம்பூர் மாவட்ட ஆட்சியர் சந்தன் சஞ்சய் திரிபாதி பெரிதும் பாராட்டியுள்ளார். அதேவேளையில், கிராமப்புறங்களில் பள்ளிக்குச் செல்வதற்கான அடிப்படைப் உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இந்நிகழ்வு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in