LATEST NEWS
இவரு நல்லாத்தான் பேசுறாரு.. ஆனா ஜெயிக்க மாட்டேங்குறாருனு சொல்றாங்க… நான் என்ன பண்ணணுவேன்.? சீமான் வைத்த டுவிஸ்ட்..!!
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறியாளர் மு. கார்த்திகாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி எதிர்கொள்ளும் விமர்சனங்களுக்கும், மாற்று அரசியலுக்கும் விளக்கமளிக்கும் வகையில் பேசினார்.
பரப்புரையின் போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், “சீமான் நன்றாகத்தான் பேசுகிறார், ஆனால் தேர்தலில் ஜெயிக்க மாட்டேங்குறாரே” என்று பலர் கூறுவதாகக் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, மக்கள் தங்களுக்கு ஓட்டுப் போட்டால்தான் தாங்கள் வெற்றி பெற முடியும் என்றும், வாக்குக்குக் காசு கொடுக்காமல் நேர்மையாகத் தேர்தலில் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என்றும் சீமான் பெருமிதத்துடன் முழங்கினார்.
மேலும், தமிழக அரசியல் சூழல் மற்றும் பிற கட்சிகள் குறித்தும் அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார். கூட்டத்தைப் பார்த்து மாஸ் என்று நினைத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) மக்கள் வாக்களித்ததாகவும், ஆனால் அது தற்போது வெறும் தூசியாகிப் போய்விட்டது என்றும் விமர்சித்த அவர், மக்கள் சிந்தித்துத் தங்களின் நேர்மையான அரசியலுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
