LATEST NEWS
“மனைவி வேண்டாம்… 5 பிள்ளைகளின் தாயான மாமியார்தான் வேணும்” எங்களை சேர்த்து வைக்காவிட்டால்.. போலீசையே மிரட்டிய நபர்.. பெரும் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், 26 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியின் சித்தியான 45 வயது பெண்ணைக் காதலித்து, அவருடன் சேர்ந்து வாழப் போவதாக அடம் பிடிக்கும் விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேஜ்வீர் என்ற அந்த இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மனைவியின் சித்தியான லதா என்பவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், லதாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த தேஜ்வீருக்கும் அவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாகக் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்து பிள்ளைகளின் தாயான லதாவைத் தனியாகப் பிரிய மனமில்லாத தேஜ்வீர், அவரை அழைத்துக்கொண்டு நேராகக் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். தான் லதாவை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும், தனது மனைவி தன்னுடன் வாழ்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், லதாவின் 5 பிள்ளைகளையும் தன்னுடனேயே வைத்துப் பராமரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி போலீசாரையே அவர் அதிரவைத்துள்ளார்.
இந்த விவகாரத்தை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் பிரிக்க முயன்றபோது, வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தீ வைக்க அவர்கள் முயன்றதாக லதாவின் மூத்த மகன் குற்றம்சாட்டியுள்ளார். “நாங்கள் ஒன்றாக வாழ்வோம், இல்லையென்றால் உங்களைச் சுட்டுப் பொசுக்கி விடுவோம்” எனத் தாய் தங்களை மிரட்டியதாகவும் அவர் போலீசில் புகாரளித்துள்ளார். இந்த விநோத மற்றும் கொலை மிரட்டல் புகார் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
