“நீதிமன்றம் கொடுத்த கிரீன் சிக்னல்… மாரிதாஸ் மீது பாயும் ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு…” அமைச்சர் TK பிரபுவின் அதிரடி நகர்வு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீதிமன்றம் கொடுத்த கிரீன் சிக்னல்… மாரிதாஸ் மீது பாயும் ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு…” அமைச்சர் TK பிரபுவின் அதிரடி நகர்வு..!!

Published

on

சென்னை உயர் நீதிமன்றம், யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ₹1 கோடி இழப்பீடு கோரி மானநஷ்ட ஈடு வழக்குத் தொடர தமிழக அமைச்சர் டி.கே. பிரபுவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தனது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே தவறான பிம்பத்தை உருவாக்கும் நோக்கத்தோடும் சமூக வலைதளங்களில் மாரிதாஸ் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில், எவ்வித ஆதாரமும் இல்லாத பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை மாரிதாஸ் வெளியிட்டு வருவதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிபதிகள், மாரிதாஸுக்கு எதிராக உரிமையியல் அவதூறு வழக்குத் தொடர அமைச்சருக்கு அனுமதி வழங்கி வழக்கைத் முடித்து வைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in