LATEST NEWS
“ரூ.4.50 கோடி வாங்கிட்டு ஏமாத்திட்டாரு..! தேர்தல் சீட் டீலிங் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..! ரூ.4 கோடி பாக்கி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய அதிமுக பிரமுகர்..!”
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் C. விஜயபாஸ்கருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் தனவிமல் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், சீட் வாங்கித் தருவதற்காகப் பெற்றுக் கொண்ட தொகையில் ரூ.50 லட்சத்தை மட்டுமே விஜயபாஸ்கர் திருப்பி கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.4 கோடியை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய C. விஜயபாஸ்கர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
