“சட்டசபையில் என் பக்கத்துல வந்து உட்கார்ந்த விஜய்… சட்டென மாறிய சட்டமன்ற சூழல்..!” அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன சீக்ரெட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சட்டசபையில் என் பக்கத்துல வந்து உட்கார்ந்த விஜய்… சட்டென மாறிய சட்டமன்ற சூழல்..!” அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன சீக்ரெட்..!!

Published

on

கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் ஒவ்வொரு துறையாக நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தும், சென்னை புழல் சிறைக்குச் சென்றும், சென்னை குடிநீர் திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும், நேபாள துயர சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும், அங்கு நடைபெற்று வரும் கள நிலவரங்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்த தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 4 அமைச்சர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனது அருகில் வந்து அமர்ந்திருந்தது அனைவரையும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மாற்றத்தை உருவாக்கும் சிறந்த ஆட்சியாகத் தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் பெருமிதத்துடன் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in