“ரெண்டு பேரும் தப்பிச்சு வந்துட்டீங்க” இல்லன்னா கதை முடிஞ்சிருக்கும்… எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாகத் தாக்கிய அமைச்சர் செங்கோட்டையன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரெண்டு பேரும் தப்பிச்சு வந்துட்டீங்க” இல்லன்னா கதை முடிஞ்சிருக்கும்… எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாகத் தாக்கிய அமைச்சர் செங்கோட்டையன்..!!

Published

on

ஈரோட்டில் நடைபெற்ற தவெக கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கே. ஏ. செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார். தேர்தல் களத்தில் அவர்கள் இருவரும் நூலிழையில் தப்பித்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சாடும் வகையில் பேசிய செங்கோட்டையன், “ஒருத்தர் நம்ம ஆள விலைக்கு வாங்கி தப்பிச்சாரு” என்று கூறினார். தொடர்ந்து திமுகவின் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தவர், “இன்னொருத்தருக்கு சேப்பாக்கத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் மனசு மாறிட்டாங்க, இல்லைன்னா கதை முடிஞ்சிருக்கும்” என்று தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.

Advertisement

அரசியல் களத்தில் இவ்விரு தலைவர்களின் தற்போதைய நிலையை விமர்சித்த செங்கோட்டையன், மக்கள் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவர்கள் மிகவும் தெளிவாக முடிவெடுக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஈரோடு கூட்டத்தில் அவர் பேசிய இந்த அதிரடி கருத்துக்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in