LATEST NEWS
டிரம்ப்பால் முடியாததை நாங்க முடிக்கிறோம்..! உக்ரைன் போரில் மோடி, ஜி ஜின்பிங் எடுத்த விஸ்வரூபம்.. புதின் கொடுத்த சிக்னல் என்ன..? திடீரென மாறிய உலக அரசியல்..!!
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஷியா – உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர, இந்தியாவும் சீனாவும் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தராக இருக்க முன்வந்துள்ளன.பிரிக்ஸ் மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த அமைதி முயற்சியைத் தொடங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இரு நாட்டுத் தலைவர்களின் இந்த மத்தியஸ்தத் தயார்நிலையை அதிபர் புதின் வெகுவாகப் பாராட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத சூழலில், இந்தியா மற்றும் சீனாவின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரஷியா, மேற்குலக நாடுகள் என அனைத்துத் தரப்புடனும் ஒரே நேரத்தில் சிறப்பான நட்புறவைப் பேணக்கூடிய அரிதான ஆற்றல் இந்தியாவிடம் இருப்பதால், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பிரதான இணைப்புப் பாலமாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.ஏற்கனவே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது புதினிடம் பேசிய பிரதமர் மோடி, “முடிவற்ற போர் என்ற நிலைப்பாட்டைக் கைவிட வேண்டும்” என்றும், “போர் நடக்கும் ஒவ்வொரு தினமும் மனிதத்தை பின்னோக்கித் தள்ளுகிறது” என்றும் காத்திரமாக வலியுறுத்தியிருந்தார்.இதற்கிடையே, வரும் டிசம்பரில் மியாமியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டின் போது, உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் புதின் – ஜெலன்ஸ்கி இடையேயான நேரடிச் சந்திப்பு சாத்தியப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
