“திக் திக் திக்.. இன்ஜினில் இருந்து வந்த கரும்புகை..” அடுத்த வினாடியே நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“திக் திக் திக்.. இன்ஜினில் இருந்து வந்த கரும்புகை..” அடுத்த வினாடியே நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற பேருந்து ஒன்று, பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்ட போது சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த போது அதன் இன்ஜினில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதை ஓட்டுநர் கவனித்துள்ளார்.உடனடியாக அவர் பேருந்தை சாலையோரம் நிறுத்திய சில வினாடிகளிலேயே, பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இது குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதிலும், பேருந்து முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக, பயணிகள் அனைவரும் முன்னரே இறக்கிவிடப்பட்ட நிலையில் பேருந்து இயக்கப்பட்டதால் இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in