LATEST NEWS
தமிழ்நாடு டூ அமெரிக்கா.. திருப்பதியில் நடந்த அதிசயம்.. ஷோபா சந்திரசேகருடன் வந்த அந்த வெளிநாட்டுப் பெண் யார்..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் அமெரிக்கத் தூதரகப் பொது அதிகாரி லாரா ஈ. வில்லியம்ஸ் ஆகியோர் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதிக்கு வருகை தந்து, விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். அவருடன் அமெரிக்கத் தூதரக அதிகாரியும் இந்த ஆன்மிக வழிபாட்டில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்த பின்னர், கோவிலுக்கு வருகை தந்த முக்கியப் பிரமுகர்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் வேத ஆசிர்வாதம் செய்து கௌரவித்தனர். தொடர்ந்து, அவர்களுக்குக் கோவிலின் சிறப்புப் பிரசாதமான ஸ்ரீவாரி தீர்த்த பிரசாதம் மற்றும் ஏழுமலையான் திருவுருவப் படம் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழக முதல்வர் விஜய்யின் தாயாரும் அமெரிக்கத் தூதரக அதிகாரியும் இணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
