LATEST NEWS
“முதல்வர் விஜய் டீ குடித்த கண்ணாடி டம்ளர்..!” எங்கே இருக்கு தெரியுமா..?டீக்கடைக்காரர் உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. வைரலாகும் பேட்டி..!!
தமிழக முதலமைச்சர் விஜய், மதுராந்தகம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள ஜோதிலிங்கம் என்பவரின் டீக்கடைக்கு திடீரெனச் சென்று டீ குடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. முதலமைச்சர் தனது கடைக்கு வந்து சென்ற பிறகு, கடையில் வியாபாரம் பல மடங்கு அதிகரித்துள்ளதாகக் கடையின் உரிமையாளர் ஜோதிலிங்கம் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஊர் மக்கள் பலரும் தற்பொழுது ஆர்வத்துடன் இவரது டீக்கடைக்கு வந்து செல்வதால், அப்பகுதியில் இக்கடை பெரும் பிரபலமடைந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தனது கடையிலிருந்து டீ குடித்த அந்த குறிப்பிட்ட கண்ணாடி டம்ளரை, ஜோதிலிங்கம் மிகவும் புனிதமாகக் கருதித் தனது வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வருகிறார். மேலும், முதலமைச்சருடன் தான் எடுத்துக்கொண்ட நெகிழ்ச்சியான புகைப்படத்தை, தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதன் காரணமாகக் கடையில் மாட்டவில்லை என்றும், தேர்தல் முடிந்த மறுநாளே அதனைத் தனது கடையில் பெரிய அளவில் மாட்டி வைக்கப் போவதாகவும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
