“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..!” நிச்சயதார்த்திற்கு பிறகு மாப்பிள்ளை செய்த காரியம்.. ஐடி பெண் அதிகாரி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..!” நிச்சயதார்த்திற்கு பிறகு மாப்பிள்ளை செய்த காரியம்.. ஐடி பெண் அதிகாரி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில், நிச்சயிக்கப்பட்ட திருமணம் திடீரென முறிந்ததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, பெங்களூரு ஐடி நிறுவனத்தின் மூத்த பெண் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஞ்சியின் புண்டாக் ஓபி பகுதியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற அந்த இளம் பெண், பெங்களூருவில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அஞ்சன் சௌத்ரி என்பவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்திற்காகத் திருமண மண்டபம் வரை முன்பதிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அஞ்சன் சௌத்ரி திடீரென தொலைபேசி மூலம் விஜயஸ்ரீயைத் திருமணம் செய்ய மறுப்பதாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் அவர் கேட்கவில்லை. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான விஜயஸ்ரீ, பெங்களூருவிலிருந்து ராஞ்சியில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், செப்டம்பர் 19 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் விஜயஸ்ரீ தொலைபேசி அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது தங்கை பாக்கியஸ்ரீ, தனது தந்தைக்குத் தகவல் கொடுத்துள்ளார். தந்தை பதறியடித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, விஜயஸ்ரீ சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் துயர மரணத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் தந்தை புண்டாக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மாப்பிள்ளை அஞ்சன் சௌத்ரி, அவரது தந்தை லலன் பிரசாத் சௌத்ரி, தாய் ரீட்டா சௌத்ரி உள்ளிட்ட 4 பேர் தன் மகளை வரதட்சணை கேட்டு மனரீதியாகக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகவும், திடீரென திருமணத்தை நிறுத்தி அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in