CRIME
அடக்கொடுமையே.. பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்.. மரணத்துடன் போராடியஅரசு ஊழியர்.. 15 நாளுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்.. உறைந்துபோன பொன்னேரி.!!
பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி தட்டச்சுப் பணியாளராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண், கடந்த மாதம் 21ஆம் தேதி பணி முடிந்து திரும்பியபோது பிரகாஷ் என்பவரால் பெட்ரோல் ஊற்றி கொடூரமாகத் தீ வைக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் 65 சதவீதப் பொன்னான தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான பிரகாஷை, காவல் துறையினர் கைது செய்ய முயன்றபோது அவர் போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார். இதனால், இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காகப் பிரகாஷின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை அதிரடியாகக் கைது செய்தார். தற்போது ராஜேஸ்வரி உயிரிழந்துவிட்டதால், பொன்னேரி போலீசார் இந்த கொலை முயற்சி வழக்கைக் கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
