“45 லிட்டர் டேங்கிற்குள் 52 லிட்டர் பெட்ரோல்..!” பங்க்கில் நடந்த ‘மந்திரம்’.. பில் பார்த்து உறைந்துபோன கார் உரிமையாளர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“45 லிட்டர் டேங்கிற்குள் 52 லிட்டர் பெட்ரோல்..!” பங்க்கில் நடந்த ‘மந்திரம்’.. பில் பார்த்து உறைந்துபோன கார் உரிமையாளர்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஹர்ஷ்நகர் எரிபொருள் நிலையத்தில், 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட புத்தம் புதிய காரின் எரிபொருள் தொட்டியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பி ‘மந்திரம்’ செய்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் சிங் என்பவர் தனது புதிய காரில் அங்கு வந்து தொட்டியை முழுமையாக நிரப்புமாறு கூறியுள்ளார். ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பிவிட்டு அதற்கான ரசீதை நீட்டிய போது, அதில் 52 லிட்டர் எனக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். “45 லிட்டர் டேங்கிற்குள் எப்படி 52 லிட்டர் பெட்ரோல் பிடிக்கும்?” என்று அவர் நியாயமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதற்கு அந்த ஊழியர்கள் முறையாகப் பதிலளிக்காமல், “தேவையில்லாமல் வாதாடாதீர்கள்; பணம் கொடுக்கும் நேரத்தில் வீண் பேச்சைத் தொடங்குகிறீர்கள், கையில் காசு இல்லையென்றால் ஏன் டேங்க் ஃபுல் செய்யச் சொன்னீர்கள்?” என்று வாடிக்கையாளரையே அநாகரிகமாகத் திட்டி மிரட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சரண் சிங், உடனடியாகக் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். போலீசார் வந்து நடத்திய தீவிர விசாரணையில், அந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஒவ்வொரு 50 லிட்டருக்கும் சுமார் 7 லிட்டர் வரை ஏமாற்றி வாடிக்கையாளர்களைக் கொள்ளையடித்து வந்தது அம்பலமானது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையேற்றம் விண்ணைத் தொட்டு வரும் நிலையில், தற்காலத்தில் சாமானிய மக்களின் ரத்தத்தைச் சுரண்டி எலுமிச்சம்பழம் பிழிவதைப் போலப் பிழிந்தெடுக்கும் இத்தகைய பெட்ரோல் பங்க் மோசடிகள் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in