LATEST NEWS
அடக்கடவுளே..! “ரூ.500-க்கு பெட்ரோல் போடுங்க..!” வீட்டுக்கு போய் பில்லைப் பார்த்த பொண்ணுக்கு தூக்கிவாரிப்போட்ட அதிர்ச்சி.. பெட்ரோல் பங்க் ஊழியர் பகீர் மோசடி..!!
டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று மாலை தனது ஆக்டிவா ஸ்கூட்டியில் பெட்ரோல் நிரப்புவதற்காக அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றார். அவர் ரூ.500-க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறிய நிலையில், பெட்ரோல் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது தனது செல்போனில் சமூக வலைதள வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மழைக்காலம் என்பதால் அவசரமாக வீட்டிற்குத் திரும்பிய அவர், பின்னர் ரசீதைப் பார்த்தபோது அதில் ரூ.210-க்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
दिल्ली की ये गरीब लड़की कल शाम अपनी Activa scooty में पेट्रोल डलवाने पेट्रोल पंप पहुंची, ₹500 पेट्रोल डालने को बोला।
लड़की Snapchat reel स्क्रोल पर बिजी थी, पंप कर्मी ने जल्दी पेट्रोल भर दिया, बारिश का मौसम था तो लड़की जल्दी घर आ गई।
घर आकर बिल चेक किया तो, लड़की के होश उड़… pic.twitter.com/lPNlFGrmZC— BHUMI (@Bhumika_2024) August 1, 2026
இதையடுத்து, மறுநாள் அந்த ரசீதுடன் மீண்டும் பெட்ரோல் நிலையத்திற்குச் சென்று விளக்கம் கேட்டார். ஆரம்பத்தில் பணியாளர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து வீடியோ பதிவு செய்து புகார் அளிப்பதாக இளம்பெண் தெரிவித்ததும், உடனடியாக பதிவுகளைச் சரிபார்த்தனர். விசாரணையில் ஏற்பட்ட தவறு உறுதியானதைத் தொடர்ந்து, மீதமிருந்த ₹290-ஐ பெட்ரோல் நிலைய நிர்வாகம் அவரிடம் திருப்பி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
