அட பைத்தியக்காரர்களா..! “வைகோ மகன் எலி வேட்டைக்குக் போக மாட்டான்.. புலி வேட்டைக்குத் தான் போவான்.. திமுக குறித்து சீறிய துரை வைகோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட பைத்தியக்காரர்களா..! “வைகோ மகன் எலி வேட்டைக்குக் போக மாட்டான்.. புலி வேட்டைக்குத் தான் போவான்.. திமுக குறித்து சீறிய துரை வைகோ…!!

Published

on

“திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கூட்டணியில் தங்களைச் சொந்தச் சின்னத்தில் போட்டியிட விடாமல் திமுக அழுத்தம் கொடுத்தது தங்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், மு.க.ஸ்டாலினுடன் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டு இனி திமுகவுடன் பயணிக்கக் கூடாது எனத் தாங்கள் முடிவெடுத்த காரணத்தையும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ளார்.

தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய அவர், “அட பைத்தியக்காரர்களா.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? நான் வீழவில்லை; வீழ்ந்தது தீய சக்தி, வீழ்ந்தது நம்மை அழிக்க வந்த சக்தி” என்று பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி திமுகவினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றப் பதவி என்பது திமுக போட்ட பிச்சை என்ற விமர்சனத்தை முன்வைப்பவர்களைச் சாடிய அவர், தேர்தல் கூட்டணியின் போது மதிமுகவிற்கு இழைக்கப்பட்ட துரோகங்களை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், “வைகோ மகன் எலி வேட்டைக்குக் போக மாட்டான்.. புலி வேட்டைக்குத் தான் போவான்” என்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் துரை வைகோ முழக்கமிட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சமூக நீதி மற்றும் திராவிட சித்தாந்தத்தைக் காப்பதற்காகவே தாங்கள் திமுக கூட்டணியில் நீடித்ததாகவும், ஆனால் தங்களைச் சொந்தச் சின்னத்தில் கூட போட்டியிட விடாமல் அவமதித்த திமுகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். தமிழக அரசியலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இவருடைய இந்த அதிரடிப் பேச்சு தற்போதைய தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in