LATEST NEWS
பகீர்..! மு.க.ஸ்டாலின் மிசா கைதுக்கு பின்னால் வேறு காரணம்..? முதலில் கைதானது வைகோ தான்… துரை வைகோ வெளியிட்ட பரபரப்புத் தகவல்..!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் அவசரநிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் அந்த கைது 100% அரசியல் காரணங்களுக்காக மட்டுமே நடக்கவில்லை என்றும் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரம் குறித்துப் பேசி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மிசா காலத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் குறித்துப் பேசிய துரை வைகோ, கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் இந்த ஒடுக்குமுறை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாலும், அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக மட்டும் கைது செய்யப்படவில்லை என்றார். ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டுகள் போன்ற பிற காரணங்களுக்காகவும் சிலர் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், திமுகவில் இருந்து மிசா சட்டத்தின்கீழ் முதன்முதலில் கைது செய்யப்பட்டவர் தனது தந்தை வைகோ தான் என்றும், அவசரநிலை முடிந்து சிறையிலிருந்து கடைசியாக விடுவிக்கப்பட்டவரும் அவர்தான் என்றும் துரை வைகோ கூறினார். ஆனால், மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானது வரலாற்று உண்மை என்றாலும், அது நூறு சதவீதம் அரசியல் காரணங்களுக்காகத் தான் நடந்ததா என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறி நீடிப்பதாக அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
