LATEST NEWS
“தேர்தலுக்கு முன் ஒண்ணு… பின்னாடி ஒண்ணு..! ஸ்டாலினின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய துரை வைகோ..!!”
தோல்வியை ஏற்கும் பக்குவத்தை மு.க.ஸ்டாலின் பெற வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். அதேசமயம், தவெக அரசை பற்றியும் CM விஜய்யை பற்றியும் திமுகவினர் கொச்சையாக விமர்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து தேர்தலுக்கு முன்பு ஒரு விதமாகவும், தேர்தலுக்குப் பின்னர் வேறு விதமாகவும் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக விமர்சித்தார். மேலும், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட்டணித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்யாமல் இருந்திருந்தால், திமுக தன் டெபாசிட்டையே இழந்திருக்கும் என்றும் துரை வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
