LATEST NEWS
“துரோகி ஒழிக!” வேட்புமனு தாக்கலின் போது பெரும் பரபரப்பு… தவெக வேட்பாளர் சத்தியபாமாவை முற்றுகையிட்டு அதிமுகவினர் அதிரடி கோஷம்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தவெக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் சூழ அவர் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது மனுவை சமர்ப்பித்தார்.
சத்தியபாமா கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர் ஆவார். இதனால் கோபமடைந்த அதிமுகவினர், வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சத்தியபாமாவுக்கு எதிராகத் திரண்டு கடுமையான எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்ததைச் சுட்டிக்காட்டிய அக்கட்சியினர், சத்தியபாமாவை நோக்கி “துரோகி ஒழிக” என ஆக்ரோஷமாகக் கோஷமிட்டனர். இந்த திடீர் கோஷங்களால் தாராபுரம் தேர்தல் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்போது இதனால் கூடுதல் சூடுபிடித்துள்ளது.
