LATEST NEWS
BREAKING: ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கு – தோனி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தனது பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறு பரப்பியதாகக் கூறி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி கடந்த 2014-ல் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் முக்கியக் கட்டமாக, தோனியிடம் நடத்தப்படும் குறுக்கு விசாரணையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரரான சம்பத்குமார் தனது மனுவில், இந்த நீதிமன்ற விசாரணையின் போது வீடியோ பதிவு செய்யப்படக் கூடிய தோனியின் வாக்குமூலத்தை எவ்வித எடிட்டிங்கும் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இன்று இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தரப்பு உரிய பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான இந்த நீண்ட கால சட்டப் போராட்டத்தில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் இந்த புதிய கோரிக்கை கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் தற்போதைய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
