“என் மகள் எனக்கு வேணும்..!” காதல் மனைவியைக் கடத்திய காதலி குடும்பத்தினர்.. அடுத்த நொடியே பொதுமக்கள் செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் வைரலாகும் சேஸிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மகள் எனக்கு வேணும்..!” காதல் மனைவியைக் கடத்திய காதலி குடும்பத்தினர்.. அடுத்த நொடியே பொதுமக்கள் செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் வைரலாகும் சேஸிங் வீடியோ..!!

Published

on

பெங்களூருவில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் அனுப்பிய 4 பேர் கும்பல் வீட்டில் புகுந்து கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பூஜா மற்றும் ஓம் பிரகாஷ் ஆகிய இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களது திருமணத்தை ஏற்காத பூஜாவின் குடும்பத்தினர், அவரைத் திரும்பக் கூட்டிச் வர சதாம், ராகேஷ், கரன், அயன் ஆகிய 4 பேரை அனுப்பியுள்ளனர். நேற்று மாலை இத்தம்பதியின் வீட்டிற்குள் புகுந்த அக்கும்பல், பூஜாவை வலுக்கட்டாயமாக ஹூண்டாய் வென்யூ காரில் கடத்தியது . பூஜாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த காரை நிறுத்த முயன்றனர்.

தப்பிக்க நினைத்த கடத்தல்காரர்கள் காரை மிக அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் சென்ற நிலையில், பொதுமக்கள் தங்களது வாகனங்களில் சினிமா பாணியில் அந்த காரைத் துரத்திச் சென்றனர். இரவு 8 மணியளவில் தப்பியோடும் அவசரத்தில் அந்த கார் வழியில் இருந்த பல வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒரு பெண்ணுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் காரின் மீது கற்களை வீசி, ஒரு வழியாக அருகில் உள்ள பகுதியில் அதைப் மடக்கி நிறுத்தி, பூஜாவை பத்திரமாக மீட்டனர். காரை ஓட்டிய சதாம் தப்பியோடிய நிலையில், ராகேஷ் (31), கரன் (25), அயன் (18) ஆகிய மூவரைப் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த ஆணவக் கடத்தல் மற்றும் விபத்து குறித்து விஜயநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in