அட கொடுமையே.. காணாமல் போன 3 வயது மாற்றுத்திறனாளி சிறுவன்… CCTV-யில் சிக்கிய கடைசி நிமிடங்கள்.. நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அட கொடுமையே.. காணாமல் போன 3 வயது மாற்றுத்திறனாளி சிறுவன்… CCTV-யில் சிக்கிய கடைசி நிமிடங்கள்.. நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!!

Published

on

இங்கிலாந்தின் சஃபோல்க் கவுண்டியில் உள்ள பிராந்தம் கிராமத்தில், பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் நோவா வுட்ஸ், கடந்த செப்டம்பர் 15, அன்று மதியம் தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து திடீரெனக் காணாமல் போனார். மதியம் 2:37 மணியளவில் அவர் பூங்காவில் விளையாடுவதும், பின்னர் அங்கிருந்த ஒரு சந்துக்குள் தனியாக ஓடிச் செல்வதும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. நோவா பேசும் திறனற்றவர் என்பதோடு, பகுதியளவு செவித்திறன் குறைபாடும் கொண்டவர் என்பதால், அவரது பெயரைச் கூப்பிட்டாலும் அவர் அதற்குப் பதிலளிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. இதனால் அவரைத் தேடும் பணி போலீசாருக்குப் பெரும் சவாலாக மாறியது.

சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் கடலோர காவல்படையினருடன் சேர்ந்து 1,300-க்கும் மேற்பட்ட உள்ளூர் பொதுமக்களும் தன்னார்வலர்களாக இணைந்து ஒரு மாபெரும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று மதியம் பூங்காவிற்கு அருகில் இருந்த ஒரு குளத்திலிருந்து ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாகச் சஃபோல்க் போலீசார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல் காணாமல் போன நோவா வுட்ஸ் உடையது தான் என முதற்கட்டமாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தில் தற்போதைக்கு எந்தவொரு சந்தேகத்திற்கிடமான குற்றப் பின்னணியும் இல்லை எனத் தெரிவித்துள்ள போலீசார், சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பூங்காவிற்குச் சென்ற இடத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்த இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in