CRIME
“எனக்கு iPhone வேணும்..!” சொந்த பாட்டியை கொடூரமாகத் தாக்கிய பேரன்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில், ஐபோன் வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த பேரன் ஒருவன், தனது சொந்த பாட்டியை கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. கோட்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்புரா பகுதியில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பேரன், தனக்கு ஐபோன் வேண்டும் என்று பாட்டியிடம் கேட்டு அடம் பிடித்துள்ளார். ஆனால், தன்னிடம் அவ்வளவு விலை உயர்ந்த போனை வாங்குவதற்குப் பணம் இல்லை என்று பாட்டி கைகாட்டி மறுத்துள்ளார்.
பணம் இல்லை என்ற பதிலைக் கேட்டதும் அந்த பேரனுக்கு கோபம் தலைக்கேறியுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவன், முதியவர் என்றும் பாராமல் தனது பாட்டியை இரக்கமின்றி சரமாரியாக அடிக்கத் தொடங்கியுள்ளான். அப்போது பாட்டியைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்த அவனது அத்தையையும் அந்த இளைஞன் கொடூரமாகத் தாக்கியுள்ளான். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ஒட்டுமொத்த புலந்த்சாகர் பகுதியிலும் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
