“இரும்பு கம்பி + ஆசிட் தாக்குதலில் துடிதுடித்து கள்ளக்காதலன்”.. அடுத்த நொடியே காதலி எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இரும்பு கம்பி + ஆசிட் தாக்குதலில் துடிதுடித்து கள்ளக்காதலன்”.. அடுத்த நொடியே காதலி எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கரீவிடி மண்டலம் கண்டிபேட்டா கிராமத்தில், இன்று அதிகாலை நேரத்தில் லிவிங்-டு-கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த கள்ளக்காதலனை, அவரது காதலி இரும்பு கம்பியால் அடித்து, முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டிபேட்டா பகுதியைச் சேர்ந்த சீனு என்பவரும், ராமுலம்மா என்ற பெண்ணும் கடந்த சில காலமாக ஒன்றாகத் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி, கடுமையான பதற்றம் நிலவியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமுலம்மா, சீனு தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்துள்ளார். அதோடு நில்லாமல், அவர் மீது ஆசிட்டையும் ஊற்றி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சீனு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கொடூரமான இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு, ராமுலம்மா பயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைகுடித்து தற்கொலைக்கு முயன்றார். கள்ளக்காதலன் கொல்லப்பட்டுக் கிடப்பதையும், பெண் விஷம் குடித்து உயிருக்குப் போராடுவதையும் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சீனுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராமுலம்மாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். குற்றக் காட்சியினை முழுமையாக ஆய்வு செய்த போலீசார், இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in