“அம்மா அங்க போகமாட்டேன்..” 12 வயது பேரனுக்கு 2 ஆண்டுகளாக பாட்டி செய்த கொடூர காரியம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா அங்க போகமாட்டேன்..” 12 வயது பேரனுக்கு 2 ஆண்டுகளாக பாட்டி செய்த கொடூர காரியம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!!

Published

on

ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், பெற்றோரின் வேலை காரணமாக லக்காபுரத்தில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பாட்டி வீட்டிற்குச் செல்ல அச்சிறுவன் தொடர்ந்து மறுத்து பதற்றமடைந்ததால், அவரது தாய் காரணத்தைக் கேட்டுள்ளார். அப்போது, தான் 6-ஆம் வகுப்பு படித்தது முதல் கடந்த 2 ஆண்டுகளாக பாட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுவன் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தனது தாயாரிடம் சென்று சண்டையிட்டதோடு இச்சம்பவம் குறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், 12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சொந்த பாட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெற்ற பேரனுக்கே பாட்டியே பாலியல் தொல்லை அளித்த விவகாரம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in