CRIME
அடச்சீ… வேலியே பயிரை மேய்ந்த கொடுமை… நான் சொல்றத கேக்கலைனா ஃபெயில் ஆக்கிடுவேன்…” 10-ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்…! 4 மாத சித்ரவதைக்குப் பின் அம்பலமான உ.பி. கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், ‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’ 10-ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரதீக் திரிபாதி என்ற அந்த ஆசிரியர், “என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால், தேர்வில் ஃபெயிலாக்கி விடுவேன்” என மாணவியை மிரட்டி தொடர்ந்து இந்த கொடுமையைச் செய்து வந்துள்ளார்.
சுமார் 4 மாதங்களாக இந்த சித்ரவதையை சகித்துக் கொண்டு அனுபவித்த அச்சிறுமி, ஒருகட்டத்தில் தனக்கு நடந்த அவலத்தை தன் தங்கையிடம் கூறியுள்ளார். தங்கையின் மூலம் குடும்பத்திற்கு விபரம் தெரியவரவே, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
