CRIME
“மயானத்தில் பயங்கரம்.. 8 வயது சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்த சைக்கோ..” கிராம மக்கள் செய்த காரியம்.. இணையத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!!
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ஷைகான் பகுதியில், அடக்கம் செய்யப்பட்ட 8 வயது சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவரை உள்ளூர் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷைகான் பகுதியில் உள்ள மயானத்தில் அண்மையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் கல்லறையை அந்த நபர் நள்ளிரவில் தோண்டிக் கொண்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர். மனிதநேயமற்ற இந்த வக்கிரச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனடியாகச் சம்பவ இடத்திற்குத் திரண்டு சென்று அந்த நபரைச் சூழ்ந்து பிடித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த நபருக்கு அங்கேயே பலத்த தர்ம அடி கொடுத்துக் தங்களின் பாணியில் கவனித்ததோடு, உடனடியாகப் பகுதி போலீசாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து அந்த நபரை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நடுக்கமூட்டும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட அந்த ஆப்கானிஸ்தான் நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மயானங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடப்பதைத் தடுக்க விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
