“அப்பாவை போட்டவனை சும்மா விடுவேனா..?” 25 ஆண்டுகால வெறி… போலீஸ் ஸ்டேஷன் முன்பே ரவுடியைச் சாய்த்த மகன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அப்பாவை போட்டவனை சும்மா விடுவேனா..?” 25 ஆண்டுகால வெறி… போலீஸ் ஸ்டேஷன் முன்பே ரவுடியைச் சாய்த்த மகன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே, தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை சுமார் 25 ஆண்டுகள் காத்திருந்து மகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த சப்பாணி சரவணன் (50) என்ற ரவுடி, சில வழக்குகளிலிருந்து விடுதலையாகி தினமும் காவல் நிலையம் அருகிலுள்ள டீக்கடைக்கு வந்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் ஒன்று, நேற்று அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் அவரைச் சூழ்ந்தபோது, உயிருக்கு பயந்து காவல் நிலையத்தை நோக்கி ஓடிய சப்பாணி சரவணனை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி, மேலமாசி வீதியைச் சேர்ந்த பாலமுருகன் உட்பட 10 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2001-ஆம் ஆண்டு மதுரை மேலமாசி வீதியில் பாலமுருகனின் தந்தை புஷ்பராஜ் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அதற்குச் சப்பாணி சரவணன் தான் முக்கியக் காரணம் என்பதும் தெரியவந்தது. தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கச் சரியான நேரத்திற்காக 25 ஆண்டுகள் காத்திருந்த மகன் பாலமுருகன், தற்போது சப்பாணி சரவணனைக் கச்சிதமாகக் கண்காணித்துக் கொலை செய்ததாகக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in