CRIME
“அடச்சீ.. தனிமையில் இருந்த காதல் ஜோடி…” காதலியின் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு அராஜகம் செய்த ரவுடி கும்பல்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
பீகார் மாநிலம் ஜமுய் குதியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்ற காதல் ஜோடியை ரவுடி கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியதோடு, அந்த இளம் பெண்ணிடம் மிக அநாகரிகமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் அத்துமீறிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனிமையில் நேரத்தைச் செலவிடச் சென்ற காதலர்களை நோட்டமிட்ட சில சமூக விரோதிகள், அவர்கள் மீது திடீரெனத் தீவிரத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். குறிப்பாக, அந்த இளம் பெண்ணின் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டுத் துன்புறுத்தியதோடு, அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லவும் ஒரு நபர் முயன்றுள்ளார்; இறுதியில் அந்தப் பெண் கீழே விழுந்து அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட பிறகே அந்த ரவுடி கும்பல் அவர்களை விடுவித்துள்ளது.
இந்தக் கொடூரமான அத்துமீறல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அசுர வேகத்தில் வைரலாகி வரும் நிலையிலும், அந்த ரவுடிகள் மீது காவல்துறை இதுவரை எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பெரும் கொந்தளிப்படைந்துள்ள நெட்டிசன்கள், பீகாரில் உள்ள பாஜக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொதுவெளியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த அவல நிலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று இணையவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
