100 சிறுமிகளுக்கு மது கொடுத்து.. போயஸ் கார்டன் சொகுசு பங்களாவில் நடந்தது என்ன..? ஜெம் கிரானைட் வீரமணியின் வாக்குமூலத்தால் நடுங்கும் தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

100 சிறுமிகளுக்கு மது கொடுத்து.. போயஸ் கார்டன் சொகுசு பங்களாவில் நடந்தது என்ன..? ஜெம் கிரானைட் வீரமணியின் வாக்குமூலத்தால் நடுங்கும் தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரம்..!!

Published

on

ஜெம் குழுமத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான 84 வயதான வீரமணி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் போக்சோ வழக்கில், போலீசாரின் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் வீடியோ ஆதாரம் இருந்தும் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியாததால் இந்த வழக்கை முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வீரமணி மற்றும் அவருக்கு உதவிய மேலாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மாதம் 2 லட்சம் ரூபாய் வாடகையில் பங்களா ஒன்றை எடுத்து வீரமணி இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது நிறுவன மேலாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மூலமாக ஏழை மற்றும் ஆதரவற்ற சிறுமிகளை வீரமணி அங்கு வரவழைத்துள்ளார். அங்கு அழைத்து வரப்பட்ட சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மதுபானம் வழங்கப்பட்டு, வீரமணி மற்றும் அவரது நெருங்கிய தொழில் கூட்டாளிகளின் பாலியல் பசிக்கு அவர்கள் விருந்தாக்கப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

பாதிக்கப்பட்ட சிறுமிகளை வலைவீசிப் பிடிப்பதற்காக அறக்கட்டளைகள் மற்றும் ஆசிரமங்கள் என்ற பெயரில் நெட்வொர்க் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் ஏழை மாணவிகளுக்குக் கல்வி உதவி வழங்குவதாகக் கூறி, அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புச் செலவுகளை ஏற்பதாக வீரமணி தரப்பில் ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்குப் புத்தாடைகள், விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கைச்செலவிற்குப் பணம் கொடுத்து நயமாகப் பேசி இந்த போயஸ் கார்டன் பங்களாவிற்கு வரவழைத்துக் கட்டாயப் படுத்தியுள்ளனர்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த கொடூரமான பாலியல் வலையமைப்பில், சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வீரமணியே வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வீரமணியைக் கைது செய்யாமல் மறைப்பதற்காகப் பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் ஒருபுறம் பாலியல் குற்றங்களை விசாரிக்க, மற்றொரு புறம் காவல்துறை அதிகாரிகள் யாருக்கெல்லாம் லஞ்சப் பணம் சென்றது என்பதைப் புலனாய்வு செய்யக் கூடுதல் ஆணையர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அதிரடி விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in